KavithaiCoffee

ஹைக்கூ - காதல் கவிதைகள்

புரிந்துகொள்ள நிச்சயமாக முடியாது...

நிலவை பற்றி
எத்தனை புத்தகம்
வேண்டுமானாலும் இருக்கலாம்

இருந்தும்...
ஆயிரம் புத்தகம் தராத
அனுபவம் பெற
கொஞ்சம் அண்ணாந்து
நிலவைப்பாருங்கள்

புத்தகம் சொன்னது அறிவு
இது அனுபவம்

என் கவிதைகள்
என்ன வேண்டுமானாலும்
சொல்லலாம் - ஆனால்

என் அன்புக்குரியவளை
முழுமையாக புரிந்துகொள்ள
நிச்சயமாக முடியாது...

கொஞ்சம் நிமிர்ந்து
அவளைப்பாருங்கள்.
ஆயிரம் கவிதை சொல்லாததை
அவள் கண்கள் சொல்லும்

No comments:

Post a Comment