KavithaiCoffee

ஹைக்கூ - காதல் கவிதைகள்

பிரிவு ஹைக்கூ கவிதைகள் 3


நீ இல்லாத வாழ்க்கையை
நடைப்பிணமாய் வாழ்கிறேன்
உன் நினைவுகள் - இன்னும்
உயிராய் ஓடிக்கொண்டிருப்பதால்

❀❀❀❀❀

உன்னோடு
வாழ இயலாவிட்டாலும்
உன் நினைவுகளுடன்
வாழ்வது ஆனந்தமே

❀❀❀❀❀

தூண்டிலில் சிக்கியும்
மகிழ்ச்சியுடன் மரணிக்கும் மீன்கள்
தூண்டிலைப் போட்டது
நீயானதால்

❀❀❀❀❀

நீ ஆசைப்பட்டது - அனைத்தும்
கிடைக்கவேண்டும்
என்பதற்காகத்தான்
நான் ஆசைப்பட்ட - உன்னை
விட்டுப்பிரிகிறேன்

❀❀❀❀❀

தேவை
ஒரு புது நிலவு
கறைகள் இல்லாமல்
தன்னை மட்டுமே சுற்றிவர
ஏங்குகிறது பூ..

❀❀❀❀❀

No comments:

Post a Comment