KavithaiCoffee

ஹைக்கூ - காதல் கவிதைகள்

பிரிவு ஹைக்கூ கவிதைகள் 1


நீ நேசிப்பது
அவன் ஆனாலும்
நான் சுவாசிப்பது
உன்னைத்தான்

❀❀❀❀❀

காதல்
சிலருக்கு வாழ்வின் தொடக்கம்
சிலருக்கு வாழ்வின் முடிவு

❀❀❀❀❀

உன்னை நேசிப்பதை
சுவாசிப்பதாய் எண்ணி
நான் வாழ்கிறேன்
அன்பை யாசிப்பதாய்
நீ எண்ணுகிறாய்

❀❀❀❀❀

போதும் போதும்
என்று சொல்லும் அளவுக்கு
என்னிடம் இருப்பது
உன் நினைவுகள் மட்டுமே

❀❀❀❀❀

உன் மருதாணியின் சிகப்பு - இனி
நீ எனக்குச் சொந்தமில்லை
என எச்சரிக்கும்
அறிவிப்பு வாசகம்

❀❀❀❀❀

No comments:

Post a Comment