KavithaiCoffee

ஹைக்கூ - காதல் கவிதைகள்

குழந்தைகள் ஹைக்கூ கவிதைகள்


 
மலர்கள் - செடிகளில்
மட்டுமே பூப்பதில்லை
மடிகளிலும் பூக்கின்றன
மழலைகளாக

❀❀❀❀❀

மகளின் மலர்பாதம்
மார்பில் பதிகையில்
தாயின் பெத்தக்கடன்
தீரும்.

பத்து மாத தவத்தில்
விளைந்த வரம்
புரியும்.

❀❀❀❀❀

பெண் பிள்ளைகள்
அன்பை அள்ளித்தரும்
அட்சய பாத்திரங்கள்.!

❀❀❀❀❀

மகளின்
ஒவ்வொரு துளி
கண்ணீரிலும்

பிரசவவேதனை
அனுபவிக்கிறான்
தந்தை

❀❀❀❀❀

பெண் பிள்ளைகள்
குழந்தையாக பிறந்து
பெண்ணாக மலர்ந்து
தாயாக வளர்கிறார்கள்

❀❀❀❀❀

No comments:

Post a Comment