கூட்டத்தின் நடுவே

நினைவு இருக்கிறதா
நாம் கைகோர்த்து நடந்த
கோயில் திருவிழா
நம்மூரில்

முன்பைவிட
கடைகள் கூடி இருக்கின்றன
கூட்டமும் அதிகமாக இருக்கிறது
ஆனாலும் கலகலப்பில்லை
ஏதோ ஒரு வெறுமை

அன்று

பேசமுடியாத சூழ்நிலையில்
நீயும் நானும்
நம் கண்கள் மட்டும்
நலம் விசாரித்து
சிரித்துக்கொண்டன

கூட்டத்தின் நடுவே
யாரும் பார்த்துவிடாமல்
பட்டும் படாமலும்
தொட்டும் தொடாமலும்

நம் கைகள் மட்டும்
அன்பை பகிர்ந்துக்கொண்டன
மற்ற உடலுறுப்புகள்
பொறாமையில் துவண்டன