KavithaiCoffee

ஹைக்கூ - காதல் கவிதைகள்

ஹைக்கூ காதல் கவிதைகள் 8


உன் வருகைக்கு
காத்திருக்கும் நிமிடங்களில்
சூரியனின் குளிர்ச்சியை
உணர்கிறேன்

❀❀❀❀❀

கடலில் கலந்த மழைத்துளியாய்
உன் மனதில் நுழைந்த நான்
அடையாளமின்றி
கரைந்து போனேன்

❀❀❀❀❀

மோனலிசாவின் புன்னகை
உலகிலேயே மிகச்சிறந்ததாம்
உளறுகிறார்கள்
உன் புன்னகையை
காணாதவர்கள்

❀❀❀❀❀

பெண்ணே!
நீ என்ன மின்சாரமா?
உன்னைத் தீண்டவில்லை
நினைத்தாலே அதிர்கிறது

❀❀❀❀❀

பேனாவே என்னை
ஏளனம் செய்கிறது
என்னடா கிறுக்குகிறாய் என்று

உனக்கு மட்டும்தானே தெரியும்
இது கவிதை என்பது

❀❀❀❀❀


No comments:

Post a Comment