KavithaiCoffee

ஹைக்கூ - காதல் கவிதைகள்

ஹைக்கூ காதல் கவிதைகள் 7


உன் கூந்தல்
மனம் கண்டபின்
மல்லிகையின்
மனம் குளிர்ந்தது.

❀❀❀❀❀

என் பின்னால்
ஆயிரம்பேர் இருந்தாலும்
என்னருகில் - நீ
இருப்பதுதான் பலம்

❀❀❀❀❀

நெருப்பினும் சூடாக நான்
நீரினும் குளுமையாக நீ
நீர் நெருப்பை
அனைப்பது இயல்பல்லவா?

❀❀❀❀❀

காதல்!
சொல்ல முடியாத சுகம்
விழுங்க முடியாத அமிர்தம்
அர்த்தம் புரியாத கனவு
கனவு மெய்பட வேண்டும்...

❀❀❀❀❀

ஆண்களின் உள்ளங்கள்
அழகிய மாளிகைகள்
யாரோ ஒரு இளவரசி
குடி கொண்டிருப்பதால்

❀❀❀❀❀

No comments:

Post a Comment