KavithaiCoffee

ஹைக்கூ - காதல் கவிதைகள்

ஹைக்கூ காதல் கவிதைகள் 5


நன்றாக உண்கிறேன்
நன்றாக உறங்குகிறேன்
ஆனாலும் காதலிக்கிறேன்
உன்னை

❀❀❀❀❀

நீ இல்லாத இடத்தில்
எனக்கென்ன வேலை
கனவைப் புறக்கணித்து
விழித்துக்கொண்டேன்

❀❀❀❀❀

நீ இல்லாத தைரியத்தில்
நடிகைகள் வந்து
செல்கிறார்கள்
என் கனவில்

❀❀❀❀❀

உன் பச்சை நரம்பினை
தூண்டிலாய் போட்டால்
விண்மீனும்
வாய் பிளந்து நிற்கும்

தூண்டிலில் சிக்கி
ஊஞ்சலும் ஆடும்.

❀❀❀❀❀

அழித்துவிட்டு மீண்டும்
தொடங்க வேண்டும் - என்
வாழ்க்கையை உன்னோடு

❀❀❀❀❀

No comments:

Post a Comment