KavithaiCoffee

ஹைக்கூ - காதல் கவிதைகள்

ஹைக்கூ காதல் கவிதைகள் 4


விழித்துக்கொண்டாலும்
மீண்டும் தூங்க முயற்சிக்கிறேன்
உன்னைக் காணாமல்
நாள் விடியாது என்பதால்

❀❀❀❀❀

இழப்பதற்கு ஒன்றுமில்லை
என்னிடம் - இருப்பன அனைத்தும்
உனக்கென்ன சேர்த்தவை

❀❀❀❀❀

உன்னை – தினம்
சுமப்பதென்றால்
செருப்பாகவும் – நான்
பிறப்பேன்

❀❀❀❀❀

நீயே – என்
சுவாசம் ஆனதால்
இன்னும் – நான்
உயிர் வாழ்கிறேன்

❀❀❀❀❀

கனவிலாவது வருவாளென
படுக்கைக்குச் சென்றேன்
தூங்கவே விடவில்லை
அவள்

❀❀❀❀❀

No comments:

Post a Comment