KavithaiCoffee

ஹைக்கூ - காதல் கவிதைகள்

ஹைக்கூ காதல் கவிதைகள் 3

 
வாடிவிடுகின்றன..
உன் கூந்தல்
ஏறாத மலர்கள்

❀❀❀❀❀

உன் மடிசாயும்
ஐந்து நிமிடங்கள் மட்டும்
நிம்மதியின் அர்த்தங்கள்
விளங்குகிறது

❀❀❀❀❀

மல்லிகைப் பூச்சரத்தில்
ஒரு குட்டி ரோஜா
கல்லூரி பேருந்தில்
தோழிகளுக்கிடையில் - நீ

❀❀❀❀❀

உயிரில் கலந்து
உயிரை கரைக்கும்
காதல்

❀❀❀❀❀

பாலைவனத்தில்
ஓர் - குளிர் ஓடை
என் மனதில் நீ

❀❀❀❀❀

ஏக்கம் கூட
அழகான உணர்வென
உன் நினைவுகள் வரும்
வேளைகளில் உணர்கிறேன்

❀❀❀❀❀

No comments:

Post a Comment