KavithaiCoffee

ஹைக்கூ - காதல் கவிதைகள்

ஹைக்கூ காதல் கவிதைகள் 2


சேர்ந்து வாழும் ஆசை
தேய்ந்து போனது - உன்
கூந்தல் தீண்டியதால்

ஆயிரம் ஆண்டுகள்
சேர்ந்து வாழ்ந்த திருப்தி

❀❀❀❀❀

நீ பேசும் பொய்கள் கூட
இளையராஜாவின் இசையில்
வைரமுத்துவின் வரிகளாய்
கேட்கிறது

❀❀❀❀❀

உன்னிலும் அழகியை
கண்டதில்லை - என்றால்
அது பொய்

காண விரும்பியதில்லை
என்பதே மெய்

❀❀❀❀❀

என் கவிதைகளின்
வார்த்தைகள்
மட்டுமே என்னுடையது

அதன் அர்த்தங்கள்
உன்னுடையது

❀❀❀❀❀

உண்மையில்
நான் வாழ்ந்தது
உன்னுடன் இருந்த
நிமிடங்கள் மட்டுமே

❀❀❀❀❀

No comments:

Post a Comment