KavithaiCoffee

ஹைக்கூ - காதல் கவிதைகள்

ஹைக்கூ காதல் கவிதைகள் 1



கவிதைநடை என்று
கேள்விப்பட்டிருக்கிறேன்
இன்றுதான் பார்க்கிறேன்
நீ நடந்து வருவதை

❀❀❀❀❀

வலை காணாத கடலை
தூண்டிலா கண்டுவிட போகிறது
பார்வை சொல்லாத காதலை
கவிதையா சொல்லிவிட போகிறது

❀❀❀❀❀

நினைத்தபடி வாழ - அல்லது
நினைத்து நினைத்து வாழ
ஒரு காதல் வேண்டும்
அனைவருக்கும்

❀❀❀❀❀

பத்து ரூபாய்
திருவிழா கொலுசும்
ஆடம்பர ஆபரணமாய் மாறுகிறது
உன் கால்களில் அணிகையில்

❀❀❀❀❀

விளக்கவே முடியாத
கவிதை - எழுதுவது
நீ மட்டுமே
புன்னகையாக

❀❀❀❀❀

No comments:

Post a Comment