இந்த உணர்வுதானே காதல்..?

ஆசைப்பட்ட பெண்ணை
திருமணம் செய்வதும்
சேர்ந்து வாழ்வதும் மட்டுமே
காதல் அல்ல

நம்மைவிட ஒருவன்
அவளை சிறப்பாக
பார்த்துக் கொள்வான் என்றால்
அவளை விட்டுக்கொடுப்பதே
உண்மையான காதல், அன்பு

நம் ஆசைகளைவிடவும்
அவளின் வாழ்க்கை
முக்கியம் - அல்லவா?

அவள் - ஒரு
சிறப்பான வாழ்க்கை வாழ்கையில்
வேறு ஒருவனுடன் வாழ்ந்தாலும்
அவள் முகத்தில் புன்னகையை
மனதில் மகிழ்ச்சியை காண்கையில்

இந்த உலகில்
ஏதோ ஒரு மூலையில்
சிறப்பாக மகிழ்ச்சியாக
வாழ்கிறாள் என்ற
செய்தியை பெறுகையில்
அவளோடு வாழ்வதை விடவும்
அதிக மகிழ்ச்சியைத்தரும்

இது தியாகமல்ல
நாம் நேசிப்பவர்கள் - சிறப்பாக
வாழ வேண்டும் என்று என்னும்
இந்த உணர்வுதானே
அன்பு, காதல்..?