KavithaiCoffee

ஹைக்கூ - காதல் கவிதைகள்

ஹைக்கூ கவிதைகள்


கிடைக்காது
என்று தெரிந்தும்
முயட்சிக்கிறேன்
ஆசை

❀❀❀❀❀

மழைத்துளி தீண்டியதும்
அழுதுகொண்டே கரைகின்றன
காகிதப்பூக்கள்

❀❀❀❀❀

இறுதி சொட்டுவரை
போராடும் போர்வீரன்
பேனா

❀❀❀❀❀

மலர்கள் பிடித்திருந்தால்
தண்ணீர் ஊற்றுங்கள்
பரித்துவிடாதீர்கள்

❀❀❀❀❀

மலர்கள்
மண்ணை நம்பியே
பூக்கின்றன

மனிதர்களை
நம்பியல்ல

❀❀❀❀❀

மலர்கள் மாறுவதில்லை
அதன் இரசிகர்கள்தான்
மாறிக்கொண்டிருக்கிறார்கள்

❀❀❀❀❀

மானிடத்தின் வளர்ச்சியும்
மாமனிதன் புரட்சியும்
பேனா மையிலிருந்தே
தொடங்குகிறது

❀❀❀❀❀

உருவமற்றதின்
உருவம் தேடுகிறேன்
கவிதை

❀❀❀❀❀

இரு கையிருந்தும்
ஊனம்
சோம்பேறி

❀❀❀❀❀

மௌனம் பேசும் வார்த்தைகள்
கவிதையின் தாய்மொழி
கவிதை காணும் மௌனம்
மொழியின் வார்த்தைகள்

❀❀❀❀❀

சுமாரான பிகர்க் கூட
சூப்பர் பிகரா தெரியும்
அடுத்தவனுடன் வருகையில்
(வைத்தெரிச்சல்)

❀❀❀❀❀

No comments:

Post a Comment