KavithaiCoffee

ஹைக்கூ - காதல் கவிதைகள்

எச்சரிக்கை - பூமி மனிதர்கள் நடமாடுமிடம்


எச்சரிக்கை - பூமி
மனிதர்கள் நடமாடுமிடம்
மனிதர்களுக்கு பயந்து
கடவுளும் நெருங்குவதில்லை
பூமியை

இங்கு சுடுகாட்டு நெருப்புக்கு
மலர்கள் பலியாகின்றன
பணம் கொடுத்தல் - அதே
நெருப்பு சாமியின்
கண்களையும் சுட்டுவிடும்

இந்து கடவுள்களும்
அவர்களை தடுக்கவில்லை
முஸ்லிம் கடவுளும்
அவளை காப்பாற்றவில்லை

மதங்களை வளர்த்ததற்கு பதிலாக
நாய்களை வளர்த்திருந்தால்
அவை நிச்சயமாக
ஆசிபாவை காப்பாற்றியிருக்கும்

மதங்களை மறந்து
மனிதர்களாக வாழுங்கள்
ஆசிபாவின் மரணம்
இறுதியானதாக இருக்கட்டும்


No comments:

Post a Comment