மகளிர்தின கவிதை

படைத்தல், காத்தல், அழித்தல்
மும்மூர்த்திகளும் - சேர்ந்து
செய்யும் தொழிலை
பூமியில் தனி ஆளாய்
செய்கிறாள் பெண்

ஆணின் வாழ்கையில்
மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும்
படைத்து

குடும்பத்தின்
அமைதியையும் ஒற்றுமையையும்
காத்து

கட்டிய கணவனின்
கவலையை துன்பத்தை
அழித்து

மும்மூர்த்திகளும் - சேர்ந்து
செய்யும் தொழிலை
பூமியில் தனி ஆளாய்
செய்கிறாள் பெண்

அதனால்தான்
சாமிக்கு அலங்கரிக்கும்
மலர்களை

மங்கையருக்கும்
சூட்டி அழகு
பார்க்கிறார்கள்
தமிழர்கள்