மனம் தீண்டும் பாவாடை

குளிர்ந்தும் குளிராத இரவு
இருண்டும் இருளாத வானம் மறைத்தும் மறைக்காத மேகம் உதித்தும் உதிக்காத நிலவு சில்லென வீசும் காற்றை துணைக்கழைத்துக் கொண்டு பூமியில் பாதம் பட்டும் படாமல் புல் வெளியில் நடந்துவருகிறாள் அவள் மல்லிகை தோட்டத்தில் ஒற்றை ரோஜா அதுவும் மஞ்சள் வர்ணத்தில் மனம் தீண்டும் பாவாடை மண் தீண்டாமல் மெல்ல உயர்த்தி இரு-கை தாங்கி நடந்து வருகிறாள் தேவதையாக நட்சத்திரங்களுக்குள் சலசலப்பு யாரது - பூமியில் நமக்குப் போட்டியாக என்று நானென்ன செய்வேன் மனம் குலைந்தேன் சிந்தனை மறந்தேன் சிலையென நின்றேன் பெண் சிலையே கண்டு

No comments:

Post a Comment