நிலவெனப் பிறந்ததால்

பூவுக்குள் கருவாகி
நிலவைப்போல் முகம்வாங்கி
சிற்பிக்குள் முத்தைப்போல்
நிலவுக்குப் போட்டியாக
இம்மண்ணில் பிறந்தவளோ
என் அழகுதேவதை

நீ நிலவெனப் பிறந்ததால்
உன்னை நெருங்கமுடியாமல்
வேடிக்கை மட்டுமே பார்க்கிறேன்