இது மேகத்தின் காதல்

சிறுக சிறுக சேரும்
காற்றின் ஈரப்பதத்தை
மொத்தமாக சேர்த்து வைத்து
மழைக் காலத்துக்கு
காத்திருக்கும் மேகம்

நேரம் கனிகையில்
சேர்த்து வைத்ததை
மழை நீராய் மடைத்திறந்து
பெய்யும்

அதைப்போல்
சிறுக சிறுக சேர்த்த
சிறுக சிறுக வளர்த்த
உன் நினைவுகள் அனைத்தையும்
உன் மீது பொழிந்துவிட்டேன்
அன்பாக, காதலாக, கவிதையாக

அதில் நனைவதும்
குடைபிடித்து கடந்துசெல்வதும்
உன் விருப்பம் - ஆனால்

குடைக்கு பயந்து
மழை ஓயாது
பெய்துகொண்டே இருக்கும்

இது மேகத்தின் காதல்

No comments:

Post a Comment