உன் காதலை கண்கள் சொல்லும்

மௌனத்தில் புன்னகைக்க - ஓரக்
கண்ணாலே நீ சிரிக்க
சிதறுதடி என் மனது
வான்பிளந்த மழைத்துளியாய்

என் நிலவை வர்ணிக்க
என் மனதை நான் திறக்க
கிடைத்திட்ட வாய்ப்பெனவே
தவறாமல் பயன்படுத்த
தமிழாலே அலங்கரித்தேன்
என் மனதை நான் திறந்தேன்

உன்னைப்போல் ஊமையல்ல
உன் வளையலும் கொலுசும்
என்னிடம் பேசுகின்றன
அவப் பொழுதுகள்

உன் கண்களைப் போல்
உன் புன்னகையைப் போல்
பேசுகின்றன என்னிடம்
இரட்டை அர்த்தத்தில்

தலை தூக்கி
நீ பார்க்கும்
ஒரு பார்வை சொல்லுதடி

உன் மனதில்
ஒரு மூலையில் - எனக்கும்
ஒரு இடமுண்டு என்பதை