காதலிக்கிறேன், ஆனால் ஏன் என்று தெரியாது

அனுதினமும்
காலை வேளையிலே
சூரிய உதயத்தை
உற்று நோக்குகிறேன்
ஏன் என்று தெரியாது

இரவு அணைக்கையில்
வானில் தவழும் நிலவையும்
துணைக்கு வரும்
நட்சத்திரங்களையும்
வேடிக்கைபார்க்கிறேன்
ஏன் என்று தெரியாது

மழை நாட்களில்
ஆடாமல் அசையாமல்
வைத்தக் கண் வாங்காமல்
வானவில்லை
வேடிக்கைபார்க்கிறேன்
ஏன் என்று தெரியாது

பூத்துக் குலுங்கும்
மலர் செடிகளை காண்கையில்
வண்டாக மாறி விடுகிறேன்
ஏன் என்று தெரியாது

கல்லூரி வாசலிலும்
கடைத் தெருவிலும் - உன்னை
காணும் இடமெல்லாம்

சுற்றிச் சுற்றி வருகிறேன்
வேடிக்கைபார்க்கிறேன் - இதுவும்
ஏன் என்று தெரியாது