காதலர் தின கவிதை

அன்று - கல்லூரி வாசலிலே 
உனைக்கண்ட நாள் முதலாய் 
தினம் எனக்கு 
பிப்ரவரி பதினான்குதான்

மகிழ்ச்சியுண்டு,
கொண்டாட்டமுண்டு
மலர் கொடுக்கும் 
வழக்கமில்லை

பூத்துக் குலுங்கும்
மலர்வனத்துக்கு எதற்கு 
ஒற்றை ரோஜா