இவற்றை இழந்துவிடக் கூடாது

புன்னகையும், ஆறுதலும்
அள்ளித்தரும் உதடுகள்

அணைத்துக்கொள்ள
தயாராக இருக்கும் கரங்கள்

சாய்ந்துகொள்ள
இடம் கொடுக்கும் தோள்கள்

தலைசாய
பணிந்திருக்கும் மடிகள்

இவற்றுக்காக - உலகில்
எதை வேண்டுமானாலும்
இழக்கலாம்

எதற்காகவும் - இவற்றை
இழந்துவிடக் கூடாது